பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திரு கோவிந்தின் நீண்ட கால பொது வாழ்க்கையானது, இந்தியாவின் வளர்ச்சி, அரசியலமைப்பில் பொதிந்துள்ள விழுமியங்கள், மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடையாளப்படுத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
திரு கோவிந்த் ஆர்வத்துடனும் எளிமையுடனும் தேசத்திற்கு சேவையாற்றியுள்ளார் எனவும், அதன் காரணமாகவே அனைத்து தரப்பு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அவரது நீண்ட பொது வாழ்வானது, இந்தியாவின் வளர்ச்சி, நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள விழுமியங்கள், மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடையாளப்படுத்துகின்றன. அவர் தேசத்திற்கு ஆர்வத்துடனும் எளிமையுடனும் சேவையாற்றியுள்ளார். அதன் காரணமாக அவர் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்படுகிறார்.
அவருக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும். @ramnathkovind”
***
(Release ID: 2317403)
TV/PLM/GS
Warm birthday greetings to former President Shri Ram Nath Kovind Ji.
— Narendra Modi (@narendramodi) October 1, 2026
His long years in public life have been marked by a steadfast commitment to the development of India, the values enshrined in our Constitution and welfare of the people. He has served the nation with passion…