Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மன உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதி மொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, விடாமுயற்சியும் மன உறுதியும் கொண்டவர்கள் தாங்கள் விரும்பிய இலக்கை அடையும் வரை, அவற்றை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். பாற்கடலைக் கடைந்தபோது வந்த கொடிய விஷத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சாமல் இருந்தது போலவே,  அமிர்தத்தைப் போன்ற தனது முழு இலக்கை அடையும் வரை மன உறுதி உள்ளவர்கள், தங்கள் முயற்சிகளை நிறுத்துவதிவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமஸ்கிருத நீதி மொழியானது, கடலில் வெளிப்பட்ட கொடிய விஷத்தால் கலங்காமல், தேவர்கள் அமரத்துவத்தின் அமிர்தத்தைப் பெறும் வரை தங்கள் முயற்சிகளை நிறுத்தவில்லை என்று கூறுகிறது. அதுபோலவே, உறுதியான, அசைக்க முடியாத எண்ணம் கொண்டவர்கள் ஆன்மாக்களும் தாங்கள் விரும்பும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் ஓய்வதில்லை என்பதை இந்த நீதிமொழி உணர்த்துகிறது.

***

(Release ID: 2317404)

TV/PLM/GS