Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நலத்திட்டத்தை அளித்தல் என்பதிலிருந்து அதிகாரமளித்தல் என்பதை நோக்கி நகர்ந்துள்ள அரசு நிர்வாகம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இக்கட்டுரை இந்தியாவின் நிர்வாக அணுகுமுறை, நலத்திட்டத்தை அளித்தல் என்பதிலிருந்து அதிகாரமளித்தலை நோக்கி எவ்வாறு நகர்கிறது என்பது குறித்தும், அதனால் வளர்ச்சிப் பணிகளில் குடிமக்களைத் தீவிர பங்கேற்பாளர்களாகத் திகழச் செய்வதையும் சுட்டிக்காட்டுகிறது. தூய்மைப்பணி, எரிவாயு இணைப்புகள், சுகாதாரப் பராமரிப்பு, கடன் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய முன்முயற்சிகள் கடைக்கோடி மக்களைச் சென்றடைவதிலும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம்  செலுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கக்கூடிய தொலைநோக்குப் பார்வையை மையமாகக் கொண்டதாகும்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இந்தியாவின் நிர்வாக அணுகுமுறை நலத்திட்டத்தை அளித்தல் என்பதிலிருந்து அதிகாரமளித்தலை நோக்கி நகர்வது குறித்து மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய எம் சிந்தியா எழுதியுள்ளார். இது வளர்ச்சிப் பணிகளில் குடிமக்களைத் தீவிர பங்கேற்பாளர்களாகத் திகழச் செய்கிறது.

தூய்மைப்பணி, எரிவாயு இணைப்புகள் முதல் சுகாதாரப் பராமரிப்பு, கடன் வசதி வரை கடைக்கோடி மக்களைச் சென்றடைவதிலும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம்  செலுத்தப்படுகிறது.  இந்த அணுகுமுறை 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கக்கூடிய தொலைநோக்குப் பார்வையை மையமாகக் கொண்டதாகும்”.

***

(Release ID: 2323078)

TV/IR/SM/GS