Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சௌம்யாவிற்கு பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 1500 மீட்டர் டி12/13 பிரிவில் தங்கம் வென்ற சௌம்யாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுகப் போட்டியில் அவரது சிறப்பான செயல்பாடு, அவரது திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை அவரது உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 1500 மீட்டர் டி12/13 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சௌம்யா ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளார்!

அறிமுகப் போட்டியிலேயே இத்தகைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது, அவரது திறமை, அர்ப்பணிப்பு, உறுதியைப் பறைசாற்றுகிறது. அவருக்கு வாழ்த்துகள்.

***

(Release ID: 2325319)

SK/PLM/RJ