நீதி, உண்மை, வீரம் ஆகியவற்றின் வாழும் வடிவமாக பகவான் ராமரை சிறப்பித்துக் காட்டும் சமஸ்கிருத நீதிமொழியை
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026) பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“பகவான் ராமர் அறநெறியின் வடிவமாகத் திகழ்கிறார். அவர் அறநெறியுள்ளோரின் இறுதிப் புகலிடமாகவும், தமது தீர்மானங்களில் அசைக்க முடியாதவராகவும், உண்மையுள்ள வீரத்தில் உறுதியானவராகவும் விளங்குகிறார். ஸ்ரீஇந்திரன் தேவலோகம் முழுவதையும் ஆண்டு காப்பதைப் போலவே, பகவான் ராமரும் இந்த முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே ஆட்சியாளராக, அனைத்து உலகங்களையும் ஆண்டு காக்கிறார்.” என்று அந்த நீதிமொழி கூறுகிறது.
(Release ID : 2325352)
****
SK/PLM/SH
रामो विग्रहवान् धर्मस्साधुस्सत्यपराक्रमः। राजा सर्वस्य लोकस्य देवानां मघवानिव॥ https://t.co/up7GplXzTg
— Narendra Modi (@narendramodi) October 20, 2026