Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சிறப்பான செயல்பாடு, நிலைத்தன்மை, உறுதி ஆகியவற்றைப் பாராட்டியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அவனி லெகரா பாராட்டுக்குரிய வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் அபாரமான புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது நிலைத்தன்மையும் உறுதியும் நாட்டைத் தொடர்ந்து பெருமைப்படுத்துகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

****

(Release ID: 2325041)

SS/PLM/RJ