Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, பாயல் நாக் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி, மகளிர் வில்வித்தை பாரா காம்பவுண்ட் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, பாயல் நாக் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ள சிறப்பான குழுப்பணியைப் பாராட்டியுள்ள திரு நரேந்திர மோடி, இருவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“சிறந்த குழுப்பணி, சிறந்த விளையாட்டுத் திறமை ஆகியவற்றின் சிறப்பான வெளிப்பாடு!

 

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் பாரா காம்பவுண்ட் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, பாயல் நாக் ஆகியோருக்கு வாழ்த்துகள்! இவ்விரு வீராங்கனைகளும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

 

(Release ID : 2326095)

****

TV/PLM/SH