Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ்பாய் பட்டுக்கு பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ்பாய் பட்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது ஒரு அற்புதமான ஓட்டம் என்றும், அவரது வேகம், கவனம், அர்ப்பணிப்பு ஆகியவை அவருக்குத் தகுதியான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

“ராகேஷ்பாய் பட் அற்புதமான ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர் டி37 பிரிவில் வெண்கலம் வென்ற அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவரது வேகம், கவனம், அர்ப்பணிப்பு ஆகியவை அவருக்கு இந்த தகுதியான பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி”

 

(Release ID : 2326101)

****

TV/PLM/SH