Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சஞ்சனா குமாரிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த சஞ்சனா குமாரிக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

அவரது இந்த சாதனையை எண்ணி பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்ட பிரதமர், வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில்,சஞ்சனா குமாரி சாதனை படைத்துள்ளார்! பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்  பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவரது செயல்பாடுகளை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அவர் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்கட்டும்: பிரதமர்”

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326773&reg=3&lang=1

(Release ID: 2326773)

****

TV/SV/SH