Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அபிஜீத் சகுஜாவுக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் பேட்மிண்டன்  ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அபிஜீத் சகுஜாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

அவர் பங்கேற்ற  முதல் போட்டியில் பதக்கம் வென்றது ஒரு பாராட்டுக்குரிய சாதனை என்றும், இது அவரது திறமை, அர்ப்பணிப்பு,  கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர், விளையாட்டுத் துறையில் அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அபிஜீத் சகுஜாவின் சிறப்பான அறிமுகம்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். தனது முதல் போட்டியில் பதக்கம் வென்றது பாராட்டுக்குரிய சாதனை. இது அவரது திறமை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது. விளையாட்டுத் துறையில் அவருக்குச் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள்: பிரதமர்”.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326750&reg=3&lang=1

(Release ID: 2326750)

****

TV/SV/SH