பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.10.2026), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அதன் அனைத்துப் பணியாளர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தங்களின் அபாரமான வீரத்தால் தனித்து விளங்கும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் வீரர்களைப் பிரதமர் பாராட்டியுள்ளார். மேலும், அவர்கள் ஒவ்வொரு சவாலையும் அபாரமான உறுதியுடன் எதிர்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் தன்னலமற்ற சேவையும் தியாகங்களும் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தன்று, அதன் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் வீரர்கள் தங்களின் அபாரமான வீரத்தால் தனித்து விளங்குகின்றனர்.
அவர்கள் எப்போதுமே அபாரமான உறுதியுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களின் தன்னலமற்ற சேவையும் தியாகங்களும் தேசத்திற்கு அளவற்ற உத்வேகத்தின் ஆதாரமாக விளங்குகின்றன. @ITBP_official”
****
(Release ID: 2327771)
AD/PLM/RJ
On their Raising Day, greetings to all personnel of the ITBP. The ITBP Himveers have distinguished themselves through their exceptional valour. They have always risen to every challenge with remarkable determination. Their selfless service and sacrifices are a source of immense inspiration to the nation. @ITBP_official
— Narendra Modi (@narendramodi) October 24, 2026