ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், மானசி ஜோஷி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் சிறப்பான செயல்பாடு நாட்டிற்குப் பெருமையைக் கொண்டு வந்துள்ளதாகவும், அவர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஜொலிப்பார்கள் என நம்புவதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“துளசிமதி முருகேசன், மானசி ஜோஷிக்கு ஒரு அருமையான தங்கம் கிடைத்துள்ளது!
மகளிர் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்த இணைக்கு வாழ்த்துகள். அவர்களின் சிறப்பான செயல்பாடு நாட்டிற்குப் பெரும் பெருமையைக் கொண்டு வந்துள்ளது. அவர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஜொலிக்கட்டும்: பிரதமர் @narendramodi”
****
(Release ID: 2327730)
AD/PLM/RJ
A fantastic Gold for Thulasimathi Murugesan and Manasi Joshi! Congratulations to the duo on becoming Asian Para Games champions in Women’s Doubles SL3-SU5. Their superb performance has brought great pride to the nation. May they continue to shine on the international stage: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026