Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பிரணவ் சூர்மா, தரம்பீருக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் கிளப் த்ரோ எஃப்51 பிரிவில், புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட பிரணவ் சூர்மாவிற்கும், வெண்கலப் பதக்கம் வென்ற தரம்பீருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

இவர்களது சாதனைகள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் கிளப் த்ரோ எஃப்51 பிரிவில், இந்தியாவிற்குத் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்!

புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட பிரணவ் சூர்மாவிற்கும், வெண்கலப் பதக்கம் வென்ற தரம்பீருக்கும் வாழ்த்துகள். இவர்களது சாதனைகள் நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்கட்டும். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”.

***

(Release ID: 2327739)

AD/SV/RJ