ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்40/எஃப்41 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நவ்தீப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முந்தைய பதிப்பில் பெற்ற நான்காவது இடத்திலிருந்து முன்னேறியுள்ள இந்தச் சாதனை சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப40/எஃப்41 பிரிவில் வெண்கலம் வென்ற நவ்தீப்புக்கு வாழ்த்துகள்! முந்தைய பதிப்பில் அவர் பெற்ற நான்காவது இடத்தில் இருந்து முன்னேறியுள்ள இந்தச் சாதனை, மிகவும் சிறப்பானதாகும். அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்கட்டும்: பிரதமர் @narendramodi”
***
(Release ID: 2327735)
AD/PLM/RJ
Congratulations to Navdeep on winning Bronze in the Men’s Javelin Throw F40/F41 event at the Asian Para Games! Improving on his fourth-place finish from the previous edition makes this achievement special. May he continue to excel and bring more pride to India: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026