Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு கெவின் பீட்டர்சன் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு கெவின் பீட்டர்சன் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இக்கட்டுரையில், விளையாட்டுத் துறையில் இந்தியாவின் வளர்ந்துவரும் திறன், மகளிர் கிரிக்கெட்டின் எழுச்சி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் நாட்டின் முன்னேற்றம் குறித்து திரு கெவின் பீட்டர்சன் பிரதிபலித்துள்ளார். இந்தியாவின் மாறிவரும் சூழலுக்கேற்ப பிரதமரின் தலைமைத்துவம் எவ்வாறு பங்களித்துள்ளது, அத்துடன் வனவிலங்குகளையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் உள்ள முயற்சிகளையும் இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“விளையாட்டு, தொழில்நுட்பம், வனப்பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா அதன் முத்திரையைப் பதிக்கிறது!

விளையாட்டுத் துறையில் இந்தியாவின் வளர்ந்துவரும் திறன், மகளிர் கிரிக்கெட்டின் எழுச்சி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் நாட்டின் முன்னேற்றம் குறித்து திரு கெவின் பீட்டர்சன் பிரதிபலித்துள்ளார். இந்தியாவின் மாறிவரும் சூழலுக்கேற்ப பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் எவ்வாறு பங்களித்துள்ளது என்பதையும், அத்துடன் வனவிலங்குகளையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் உள்ள முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்”.

***

(Release ID: 2328352)

SS/IR/SM/GS