விவசாயிகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு வலுவான ஆதாரமாகத் திகழ்கின்றனர் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அவர்களது நலன்களுக்கும் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில், தேசிய வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதியுதவி திட்டம் சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
குஜராத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதில், பனஸ்கந்தாவில் உள்ள விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு இதுவரை ரூ.18,000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.50 லட்சம் கோடிக்கும் அதிகமான பலன்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் உரங்களின் விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியப் பிரதமர் இந்த விலை உயர்விலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
விவசாயிகள் பயன் அடையும் வகையில் நெல், கோதுமை உள்ளிட்ட வேளாண் விலைப்பொட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் கோடி வரை விவசாயிகள் இழப்பீடாக பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் குசும் திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 12 லட்சம் சூரியசக்தி பம்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
விவசாயம், கால்நடை வளர்ப்பில் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு, மண்வள அட்டை சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தாங்கி வளரக்கூடிய புதிய ரக விதைகளை விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக கால்நடை வளர்ப்பு உள்ளது என்றும் இதில் கிராமப்புற பெண்கள் பெருமளவு ஈடுபட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330423®=48&lang=1&_gl=1
****
SK/SV/SU/SH
From farms and dairy to infrastructure and connectivity, Banaskantha is making new strides in development. https://t.co/PCTYAW27DN
— Narendra Modi (@narendramodi) October 30, 2026
हमारे किसान, हमारे अन्नदाता, विकसित भारत के सबसे मजबूत स्तंभों में से एक है। और हमारी सरकार ने हमेशा किसानों के कल्याण को, किसानों को सशक्त करने को प्राथमिकता दी है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 30, 2026
पशुपालन हमारी ग्रामीण अर्थव्यवस्था का महत्वपूर्ण अंग है। इसमें हमारी बहनों की बहुत बड़ी भागीदारी है। बीते दशक में हमने पशुपालन और डेयरी सेक्टर में भी विज्ञान और टेक्नोलॉजी के इस्तेमाल पर जोर दिया है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 30, 2026
हम पशुपालन को केवल परंपरा नहीं बल्कि किसान की आमदनी बढ़ाने और गांवों को समृद्ध बनाने का मजबूत साधन बना रहे हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 30, 2026
जीवन के अंतिम क्षण तक... आपकी सेवा में ही जुटा रहूंगा: PM @narendramodi in Banaskantha
— PMO India (@PMOIndia) October 30, 2026