இந்தியாவின் சூரியசக்தி பயணம் எவ்வாறு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பிரதமரின் சூரியவீடு இலவச மின்சார திட்டம், பிரதமரின் குசும் திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம், இந்தியாவின் சூரிய மின்சக்தி வளர்ச்சியை இக்கட்டுரை எடுத்துக்காட்டுவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா தனது 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை நோக்கி பயணிக்கும் சூழலில், சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய வேளாண்மை, எரிசக்தி சேமிப்பு முதல் உற்பத்தி, பசுமை வேலைவாய்ப்புகள் வரை எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்” என்று திரு மோடி மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
இந்தியாவின் சூரியசக்தி பயணம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது!
பிரதமரின் சூரியவீடு இலவச மின்சார திட்டம், பிரதமரின் குசும் திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம், இந்தியாவின் சூரிய மின்சக்தி அடைந்துள்ள வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதியுள்ளார்.
இந்தியா தனது 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை நோக்கி பயணிக்கும் சூழலில், சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய வேளாண்மை, எரிசக்தி சேமிப்பு முதல் உற்பத்தி, பசுமை வேலைவாய்ப்புகள் வரை எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.
***
(Release ID: 2331444)
SS/IR/LDN/GS
India's solar energy journey is opening up new opportunities! Union Minister Shri @JoshiPralhad writes about the growth of solar power in India, driven by initiatives such as PM Surya Ghar and PM-KUSUM. He also looks at what lies ahead, from solar-powered agriculture and energy storage to manufacturing and green jobs, as India works towards its 500 GW renewable energy target.
— PMO India (@PMOIndia) November 2, 2026