Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் தூய்மை எரிசக்தி மாற்றத்தில் சூரியசக்தியின் பங்கு குறித்த கட்டுரையைப் பகிர்ந்த பிரதமர்


நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரியசக்தி முக்கியப் பங்காற்றி வருவதால், இந்தியாவின் தூய்மை எரிசக்தியை நோக்கிய மாற்றம் எவ்வாறு வேகம் பெற்று வருகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு மைக் ப்ளூம்பெர்க் ஆகியோர் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரியசக்தி திட்டத்தின் விரிவாக்கம், சேமிப்பு மற்றும் மின்பரிமாற்றத்திற்கான முதலீடு ஆகியவற்றை இந்தக் கட்டுரை எடுத்துரைப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி  பதிவிட்டுள்ளதாவது:

“நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில், சூரியசக்தி முக்கிய பங்காற்றி வருவதால், இந்தியாவின் தூய்மை எரிசக்தியை நோக்கிய மாற்றம் வேகம் பெற்று வருகிறது.

மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு மைக் ப்ளூம்பெர்க் ஆகியோர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரியசக்தி திட்டத்தின் விரிவாக்கம், சேமிப்பு மற்றும் மின்பரிமாற்றத்திற்கான முதலீடு ஆகியவை குறித்து கட்டுரை எழுதியுள்ளனர்.  .

இந்த மாற்றம், மின்கட்டணங்களை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும் எவ்வாறு உதவுகிறது என்பதை அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331459&reg=3&lang=1

 

***

SS/LN/GS