ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331500®=48&lang=1
***
SS/LN/GS
Saddened by the loss of lives due to a mishap in Jhunjhunu, Rajasthan. My condolences to the bereaved families. May the injured recover at the earliest. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 2, 2026