Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் 2026-ல் பங்கேற்ற இந்திய குழுவினருடன் பிரதமர் நவம்பர் 5 அன்று உரையாடுகிறார்


ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் 2026-ல் பங்கேற்ற இந்திய குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் 2026 நவம்பர் 5 அன்று மாலை 4.30 மணியளவில் உரையாடுகிறார்.

ஜப்பானின் அய்ச்சி நகோயா நகரில் இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் இந்தியக் குழுவினர் சிறப்பான பங்களிப்பைப் பதிவு செய்தனர். இப்போட்டியில் பங்கேற்ற 97 இந்திய பாரா வீரர்கள் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலப்பதக்கம் உட்பட மொத்தம் 114 பதக்கங்களைப் வென்றனர்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், இந்திய பாரா ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு அலுவலர்கள், மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

***

(Release ID: 2332462)

AD/IR/SM/SH