Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் 2014-ம் ஆண்டு 248 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ வழித்தடங்கள் இருந்த நிலையில், தற்போது சுமார் 1,200 கிலோ மீட்டர் தொலைவிற்கு விரிவடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்


இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பின் சிறப்பான விரிவாக்கம் குறித்து எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டில் 2014-ம் ஆண்டு 5 நகரங்களில் வெறும் 248 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ வழித்தடங்கள் இருந்ததோடு ஒப்பிடும்போது, தற்போது 26 நகரங்களில் சுமார் 1,200 கிலோ மீட்டர் தொலைவிற்கு வழித்தடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும், ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் மெட்ரோவில் பயணிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த விரிவாக்கம் மூலம் போக்குவரத்தில் செலவிடப்படும் நேரம் குறைவதாகவும், குடும்பத்துடன் செலவிடும் நேரம் அதிகரிப்பதாகவும், சிறந்த உற்பத்தித்திறனோடு, நல்ல வாய்ப்புகளும் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற இந்தியாவை உருவாக்க அரசு இது போன்ற மாற்றத்தை செயல்படுத்துவதாக திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நான் உங்களிடம் கேட்கிறேன்….

2014-ம் ஆண்டிற்கு முன்பாக இருந்த அதே வேகத்தில் இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு விரிவடைந்திருந்தால் புனே போன்ற நகரங்களில் மெட்ரோ வசதி கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்?

பல ஆண்டுகள்… இல்லை… தசாப்தங்களே ஆகியிருக்கும்.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

2014-ம் ஆண்டில், இந்தியாவின் 5 நகரங்களில் வெறும் 248 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ வழித்தடங்கள் இருந்தது.

தற்போது 26 நகரங்களில் சுமார் 1,200 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளது.

நாள்தோறும், ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் மெட்ரோவில் பயணிக்கின்றனர்.

இது புள்ளியியல் அல்லது எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது.

இதன் மூலம் போக்குவரத்தில் செலவிடப்படும் நேரம் குறைகிறது, குடும்பத்துடன் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, சிறந்த உற்பத்தித்திறனோடு, நல்ல வாய்ப்புகளும் ஏற்படுகிறது.

நகர்ப்புற இந்தியாவை உருவாக்க நாங்கள் இது போன்ற மாற்றத்தை செயல்படுத்துகிறோம்!”

***

(Release ID: 2333105)

AD/IR/PS/RJ