Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான புள்ளிவிவர மாற்றம், பகுப்பாய்வு, ஆராய்ச்சிக்கு, அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கான முன்முயற்சித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான புள்ளிவிவர மாற்றம், பகுப்பாய்வு, ஆராய்ச்சிக்கு, அடுத்த ஐந்து ஆண்டு (2026-27 முதல் 2030-31) காலத்திற்கான முன்முயற்சித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, ரூ.4,371.10 கோடி மதிப்பிலான  இந்தத் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் வழங்கியது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, துல்லியமான, காலத்திற்கு ஏற்ற தரவுகளை வழங்குவதற்கும், தரவுகளின் முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களை சேகரிப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு உகந்த ஒருங்கிணைந்த தரவுத் தொகுப்புகளை உருவாக்குவதற்கும், எதிர்காலத்திற்குத் தேவையான வலுவான அதிகாரபூர்வ புள்ளிவிவரக் கட்டமைப்பை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம், கொள்கை சார்ந்த உடனடித் தேவைகளுக்கு ஏற்ப வளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் ஒதுக்கீடு செய்ய வகை செய்கிறது. பெரிய அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வது, முறையியல் ஆராய்ச்சி, டிஜிட்டல் மாற்றம், தேசிய தரவு நிர்வாகம் ஆகியவற்றில் ஒரு முழுமையான செயல்முறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அனைத்து புள்ளிவிவரங்கள், தரவு மேலாண்மை நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரபூர்வ புள்ளிவிவர அமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

•     விரிவான புள்ளிவிவர செயல்பாடுகள், அதற்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துதல்

•     புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக நடைமுறைகளை வலுப்படுத்துதல்

•     பொருளாதார அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 

ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332480&reg=3&lang=1&_gl=1

***

AD/SV/RJ