மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐஐடி-யின் 75-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.11.2026) பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இளம் தலைமுறையினரால் எதையும் சாதிக்க முடியும் என்றும், தங்களுடைய சிந்தனைகளுக்கு எல்லை விதிக்காமல் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் முதல் ஐஐடி கல்வி நிறுவனமான கரக்பூர் ஐஐடி, நாட்டின் 75 ஆண்டுகால வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார். நாட்டின் தொழில்துறை, உள்கட்டமைப்பு, விண்வெளி, அணுசக்தி, மென்பொருள் துறை போன்றவற்றின் வளர்ச்சிக்கு இந்த நிறுவனத்தில் படித்த மாணவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த பழைய சிறை முகாம் அமைந்த இடத்தில்தான் தற்போது கரக்பூர் ஐஐடி செயல்படுகிறது என அவர் தெரிவித்தார். அன்று சுதந்திரம் பெற வேண்டும் என்ற கனவுடன் போராடியவர்கள் இருந்த இடத்தில், இன்று தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் உள்ளனர் என்று பிரதமர் கூறினார். இது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் உண்மையான சக்தி என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.
செமி கண்டக்டர் உற்பத்தித் துறையில் இந்தியா நுழைந்தபோது பலர் சந்தேகம் எழுப்பினர் என்றும் ஆனால், நான்கு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் பல செமி கண்டக்டர் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்தியா சிப்களையும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது எனவும் இவற்றில் கரக்பூர் ஐஐடி-யில் படித்த மாணவர்களும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பயனாக, கரக்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் பவன் உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பெருமையைப் பெற்றதாக பிரதமர் தெரிவித்தார். இதுபோன்ற பல விண்வெளி நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றன என்று அவர் கூறினார்.
அடுத்த 20 ஆண்டுகள் மாணவர்களின் வாழ்க்கையிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் மிகவும் முக்கியமானவை எனவும் இப்போதைய பல மாணவர்கள் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் நிலைக்கு வருவார்கள் என்றும் அவர் கூறினார். எனவே, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்னார்.
‘தேசமே முதன்மையானது‘ என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் நாட்டிற்கும் பெரும் நன்மை கிடைக்கும் எனவும் சிந்தனையின் எல்லைகளை உடைத்து, வாய்ப்புகளை உருவாக்குங்கள் என்றும் இளைஞர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ஐஐடி கரக்பூர் தனது 100-வது ஆண்டு விழாவை வளர்ச்சியடைந்த இந்தியாவில் கொண்டாடும் வகையில் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘இலக்கை அடையும் வரை ஓயாது உழையுங்கள்‘ என்ற சுவாமி விவேகானந்தரின், பொன்மொழியைக் குறிப்பிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339465®=3&lang=1
(Release ID : 2339465)
****
TV/PLM/SH
There are no limits to what young minds can achieve. Speaking at the Platinum Jubilee celebrations of IIT Kharagpur. @IITKgp https://t.co/VkB3UO2Rkn
— Narendra Modi (@narendramodi) November 21, 2026
आज जब हम विकसित भारत के लक्ष्य के साथ आगे बढ़ रहे हैं तो IIT खड़गपुर का 75 वर्षों का अनुभव देश के विकास में, देश के innovation profile में बहुत बड़ी भूमिका निभाने वाला है: PM @narendramodi at Platinum Jubilee celebrations of @IITKgp
— PMO India (@PMOIndia) November 21, 2026
राष्ट्र भी अपनी क्षमताओं को तभी पहचानते हैं जब वे अपनी सोच की सीमाओं को तोड़ते हैं। पिछले कुछ वर्षों में भारत ने यही करके दिखाया है। भारत ने डंके की चोट पर कहा... Break the Limits. Unlock the Possibilities: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 21, 2026
Nation First... जब आप इस mindset से आगे बढ़ेंगे तो निश्चित ही, ये आपके लिए भी नए अवसर लेकर आएगा और देश को भी बहुत लाभ होगा: PM @narendramodi at @IITKgp Platinum Jubilee celebrations
— PMO India (@PMOIndia) November 21, 2026