Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லச்சித் தினத்தை முன்னிட்டு மாவீரர் லச்சித் போர்புகானுக்கு பிரதமர் புகழஞ்சலி


லச்சித் தினத்தை முன்னிட்டு, அசாமைப் பாதுகாப்பதில் மாவீரர் லச்சித் போர்புகானின் துணிச்சல், மன உறுதியை நினைவுகூர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

லச்சித் போர்புகானின் இணையற்ற தலைமைப் பண்பும், மக்கள் சேவையில் அவரது அர்ப்பணிப்பும் இன்றைய தலைமுறையினரையும் ஊக்குவிப்பதாகவும், அசாமின் வலிமையையும், உணர்வையும் அனைவருக்கும் நினைவூட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில்,

“லச்சித் தினத்தில், அசாமைப் பாதுகாப்பதில் துணிச்சல், மன உறுதியை வெளிப்படுத்திய மாவீரர் லச்சித் போர்புகானுக்கு நாம் புகழஞ்சலி செலுத்துவோம். அவரது இணையற்ற தலைமைப் பண்பும், மக்கள் சேவை மீதான அர்ப்பணிப்பும் பல தலைமுறைகளையும் தொடர்ந்து ஊக்குவிப்பதாக உள்ளது; அசாமின் வலிமையையும், உணர்வையும் நமக்கு நினைவூட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340706&reg=3&lang=1

****

TV/PD/SH