திறன் மேம்பாட்டிற்கு நாடு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், திறன் பயிற்சியை விருப்பமான தொழில் தேர்வாக மாற்றுவதன் அவசியம் குறித்தும் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
வரவிருக்கும் 2027-ம் ஆண்டு உலகத் திறன் போட்டியின் ஆசியப் பிரிவு நிகழ்ச்சி, தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கான பிரதமரின் சேது திட்டம், தொழில்துறையுடன் இணைந்த பயிற்சியை வலுப்படுத்தும் முன்முயற்சிகள் ஆகியவற்றை திரு சவுத்ரி எடுத்துரைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகளுக்கு இளைஞர்களை இம்முயற்சிகள் எவ்வாறு தயார்படுத்துகின்றன என்பதையும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
இந்தியா தனது திறன் மேம்பாட்டுப் பயணத்தை உலக அரங்கிற்குக் கொண்டு செல்கிறது!
திறன் மேம்பாட்டிற்கு நாடு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், திறன் பயிற்சியை விருப்பமான தொழில் தேர்வாக மாற்றுவதன் அவசியம் குறித்தும் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி (@jayantrld) எழுதியுள்ளார்.
வரவிருக்கும் 2027-ம் ஆண்டு உலகத் திறன் போட்டியின் ஆசியப் பிரிவு நிகழ்ச்சி, தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்தும் பிரதமரின் சேது திட்டம் மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சியை வலுப்படுத்தும் முன்முயற்சிகள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் உருவாகும் புதிய வாய்ப்புகளுக்கு இளைஞர்களை இம்முயற்சிகள் எவ்வாறு தயார்படுத்துகின்றன என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340796®=3&lang=1
****
TV/SE/SH
India is taking its skilling journey to the world stage! Union MoS Shri @jayantrld writes about the country's growing focus on skill development and the importance of making skilling a preferred career pathway. He highlights the upcoming WorldSkills Asia 2027, the PM-SETU initiative to upgrade ITIs and efforts to strengthen industry-linked training. He also reflects on how these initiatives are preparing youth for emerging opportunities in the age of AI.
— PMO India (@PMOIndia) November 24, 2026