Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் விரிவாக்கத்தை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு அசோக் குமார் லஹிரி எழுதிய இந்திய தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் விரிவாக்கத்தை எடுத்துரைக்கும்  கட்டுரை ஒன்றை பகிர்ந்தார்.  

வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்சவரம்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அது அதிகமான தொழிலாளர்களை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதில் வகிக்கும் பங்கு ஆகியவற்றை திரு லஹிரி எடுத்துரைத்தார். மேலும் இந்த விரிவான பாதுகாப்பு திட்டம் ஊழியர்களை தக்கவைத்தல், பணியாளர் நிலைத்தன்மை, வேலைவாய்ப்பை மேலும் முறைப்படுத்துதல் ஆகியவற்றை எவ்வாறு ஆதரிக்கும் என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இந்திய தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் விரிவாக்கம்.

நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு அசோக் குமார் லஹிரி, வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்சவரம்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அது அதிகமான தொழிலாளர்களை வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதில் வகிக்கும் முக்கியப் பங்கு  ஆகியவற்றைக் குறித்து எழுதியுள்ளார்.

இந்த விரிவான பாதுகாப்பு திட்டம், ஊழியர்களை தக்கவைத்தல், பணியாளர் நிலைத்தன்மை, வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எவ்வாறு துணைபுரியும் என்பது குறித்து அவர் விவாதித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341136&reg=3&lang=1

 

***

SS/LN/SH