Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீடித்த சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ நோக்கிய இந்தியாவின் பயணத்தை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நீடித்த சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ நோக்கிய இந்தியாவின் பயணத்தை எடுத்துரைத்து, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தலைவர் திரு ஆர் முகுந்தன் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

உள்கட்டமைப்பு முதலீடு, ஜிஎஸ்டி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெரு நிறுவனங்களுக்கான வரி சீர்திருத்தங்கள், பிஎல்ஐ திட்டங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அடித்தளங்களை திரு முகுந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தியாவின் பொருளாதார சாத்தியக் கூறுகளை செழுமையானதாக மாற்றுவதற்கு, அரசும் தொழில்துறையும் ஒரே குழுவாக இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

பல்வேறு துறைகளில் நீடித்த சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ நோக்கி இந்தியா பயணிக்கிறது.

உள்கட்டமைப்பு முதலீடு, ஜிஎஸ்டி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெரு நிறுவனங்களுக்கான வரி சீர்திருத்தங்கள், பிஎல்ஐ திட்டங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அடித்தளங்களை சிஐஐ தலைவர் திரு ஆர் முகுந்தன் எழுதியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார சாத்தியக் கூறுகளை செழுமையானதாக மாற்றுவதற்கு, அரசும் தொழில்துறையும் ஒரே குழுவாக இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

***

Release ID: 2341108

SS/IR/LDN/SH