Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காபூலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்; தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி


காபூலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

“தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவுசெய்து, இதில் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தான் நாட்டின் போராட்டத்திற்கு இந்தியா துணை நிற்கும்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.