பி.எம்.இந்தியா
திறன் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி, திறன் சான்றிதழ்கள், அவற்றின் மேலான ஒப்பதல் குறிப்புகள் கப்பல் ஊழியர்களுக்கான பிற நாட்டு அரசு உடன்பாட்டு விதி 1/10 பிரிவின்படி வழங்கிய பயிற்சி ஆவண அத்தாட்சி மற்றும் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை அங்கீகரிக்க வகை செய்கிறது. மேலும் கப்பல் ஊழியர்கள் பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் இரு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்புக்கும் வகை செய்கிறது.
கப்பல் ஊழியர்களின் கல்வி, பயிற்சி மற்றும் மதிப்பீடு ஆகியவை STCW நெறிகளின்படி ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பயிற்சி மதிப்பீடு நிலைக்கும் ஏற்ப நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.