Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மக்களுக்கு பிரதமரின் செய்தி


குஜராத் மாநிலத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளே,

மகாத்மா காந்தியும், சர்தார் படேலும் வாழ்ந்த மாநிலமான குஜராத்தில் தற்போது ஒருவிதமான சூழ்நிலை நேற்று முதல் நிலவுகிறது. அங்கு வன்முறைகள் நிகழ்கின்றன. வன்முறையினால், எந்த விதமான பலனும் ஏற்படப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.

நாம் இணைந்து செயல்பட்டால் தான் மாநிலம் வளர்ச்சியை அடைய முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

அமைதி என்ற ஒரே மந்திரத்தை கடைப்பிடிப்பது முக்கியம் என்று எனது சகோதர சகோதரிகளை இந்நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். பேச்சுவார்த்தைகளின் மூலமாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

ஜனநாயகத்தின் கோட்பாட்டை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். நம்மிடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண வேண்டும். அதனால், குஜராத் மாநிலம் புதிய உச்சத்தை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது குஜராத் மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்.