பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பெருந்திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்துப் பாராட்டிய அவர், கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் வருகை தந்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். இந்த மாபெரும் மக்கள் திரளானது தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இது பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இது ராஜஸ்தான் முழுவதும் சுற்றுலா, வர்த்தக, பொருளாதார வாய்ப்புகளையும் வலுப்படுத்தும்.”
“நமது தேசத்தின் ஒவ்வொரு பகுதியையும் இணைப்பதற்கான நமது அர்ப்பணிப்பின் உந்துதலால், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து சிறந்து விளங்குகிறது.”
“பச்சபத்ராவில் உள்ள ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் வளாகமான ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை அதிகரித்து, பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்தும். தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் இது மற்றொரு மைல்கல் ஆகும்.”
“ராஜஸ்தானின் பலோத்ராவில் அமைந்துள்ள, நாட்டின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் வளாகத்தைப் பார்வையிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த அதிநவீன சுத்திகரிப்பு நிலையம் நமது எரிசக்தித் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்.”
“நகரங்களில் போக்குவரத்து இணைப்பை விரைவாக விரிவுபடுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தத் திசையில், ஜெய்ப்பூர் மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.”
” ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 54,000 இளம் சக ஊழியர்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதங்களை வழங்கியதில் நான் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். நான் அவர்களை வாழ்த்துவதோடு, மாநிலத்தின் எதிர்காலம் ஒளிமயமாக அமையவும் வாழ்த்துகிறேன்.”
“ராஜஸ்தானின் பலோத்ராவுக்குப் பெருமளவில் வந்துள்ள என் குடும்ப உறுப்பினர்களின் உற்சாகமும் ஆர்வமும், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகளில் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக அடைகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.”
“கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் எரிசக்தித் திறனை அதிகரிப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இந்த முயற்சிகளின் விளைவாக, 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை புதிய இந்தியாவின் மன உறுதி வென்றுள்ளது.”
“எங்கள் அரசு மற்ற ஆற்றல் மூலங்கள் தொடர்பாகவும் பணியாற்றி வருகிறது. ராஜஸ்தானுக்கு சூரியனின் அருள் இருப்பதால், உலகத் தரம் வாய்ந்த சூரிய மின் சக்திப் பூங்காக்களையும் சூரிய ஆற்றலையும் மேம்படுத்துவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
***
(Release ID: 2281172)
TV/PLM/RJ
Delighted to inaugurate the New Terminal Building at Jodhpur Airport.
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
In addition to providing passengers with better amenities, it will also strengthen tourism, trade and economic opportunities across Rajasthan.
India’s aviation sector continues to soar, powered by… pic.twitter.com/1V0jN5Tgcl
Inaugurated the integrated refinery-cum-petrochemical Complex, the HPCL Rajasthan Refinery at Pachpadra today. This landmark project will strengthen India’s energy security, boost domestic manufacturing, generate employment and accelerate economic transformation. It is another… pic.twitter.com/zWuYok3rvZ
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
राजस्थान के बालोतरा में देश के पहले ग्रीनफील्ड इंटीग्रेटेड रिफाइनरी-कम-पेट्रोकेमिकल कॉम्प्लेक्स को देखने का सुअवसर मिला। यहां की अत्याधुनिक रिफाइनरी से हमारे ऊर्जा सेक्टर को एक नई मजबूती मिलने वाली है। pic.twitter.com/zIG3CmhGGs
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
शहरों में कनेक्टिविटी के तेज विस्तार के लिए हम प्रतिबद्ध हैं। इसी दिशा में आज जयपुर मेट्रो के फेज-2 का शिलान्यास करके बहुत खुशी हुई है। pic.twitter.com/vLyFcqtaiP
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
आज राजस्थान के करीब 54 हजार युवा साथियों को सरकारी नियुक्ति पत्र सौंपकर बहुत संतोष का अनुभव हुआ है। मैं उन्हें बधाई देने के साथ ही राज्य के उज्ज्वल भविष्य की कामना करता हूं। pic.twitter.com/dLujMw1Sfl
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
राजस्थान के बालोतरा में अपार संख्या में पधारे मेरे परिवारजनों के जोश और उत्साह से पता चलता है कि वे राज्य में हो रहे चौतरफा विकास कार्यों से कितने खुश हैं। pic.twitter.com/QdEkl0tYwj
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
बीते एक दशक में हमने देश की ऊर्जा क्षमता को बढ़ाने के अभूतपूर्व प्रयास किए हैं। इन्हीं प्रयासों का नतीजा है कि आज 21वीं सदी के सबसे बड़े ऊर्जा संकट पर नए भारत की इच्छाशक्ति भारी पड़ी है। pic.twitter.com/25Hdg2t7X2
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
पश्चिम एशिया में युद्ध की वजह से डीजल-पेट्रोल पर आए संकट को देखते हुए कई तरह की अफवाहें फैलाने और डराने-भड़काने के राजनीतिक खेल खेले गए। लेकिन भारत ने अपनी डिप्लोमेसी और दोस्ती से हर संकट पर काबू पाकर सभी गलत इरादों को नाकाम कर दिया। pic.twitter.com/QOE86SANed
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
युद्ध के हालात में किसानों के लिए फर्टिलाइजर की समस्या हो या MSMEs से जुड़ी चुनौतियां, हमने इनसे निपटने के लिए सही समय पर सटीक कदम उठाए। इससे वे आज खुद को सुरक्षित महसूस कर रहे हैं। pic.twitter.com/ms5xjAdpDs
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
हमारी सरकार ऊर्जा के दूसरे स्रोतों पर भी काम कर रही है। राजस्थान पर सूर्यदेव की कृपा को देखते हुए यहां विश्वस्तरीय सोलर पार्क बनाने के साथ-साथ सौर ऊर्जा से जुड़े कई प्रयास किए जा रहे हैं। pic.twitter.com/J7VIszvXUG
— Narendra Modi (@narendramodi) July 4, 2026