Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய அறிவியல் தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து: அறிவியல் துறைக்கு அளித்த பங்களிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு புகழாரம்


தேசிய அறிவியல் தினத்தையொட்டி, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அறிவியல் துறைக்கு அளித்த பங்களிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு புகழஞ்சலி செலுத்துவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “தேசிய அறிவியல் தினத்தில், நமது விஞ்ஞானிகள் சமூகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டை கட்டமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் அவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அறிவியல் துறைக்கு தலைசிறந்த பங்களிப்பை அளித்ததற்காக சர் சி.வி.ராமனுக்கு நாம் புகழாரம் சூட்டுகிறோம். அவரது பங்களிப்பு, அடுத்துவரும் சந்ததியினருக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

***