Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களின் எண்ணெய் வயல் குறித்த கொள்கை


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் ஆயில் இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் குறைந்த அளவு பெட்ரோலியப் பொருட்கள் உள்ள எண்ணெய் வயல்கள் வளர்ச்சிக்கான கொள்கைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த எண்ணெய் வயல்களில் பெட்ரோலியப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் உற்பத்தி செலவு, தொழில்நுட்ப பிரச்சனைகள், நிதி ஒதுக்கீடு, குறைந்த அளவு பெட்ரோலியப் பொருட்கள் இருப்பது ஆகிய பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக இவற்றில் இருந்து அரசுக்கு வருமானம் பெற முடியவில்லை.

இந்த புதிய கொள்கையின்படி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் ஆயில் இந்தியா நிறுவனம் ஆகியவற்றிற்கு சொந்தமான 69 எண்ணெய் வயல்கள் ஏலத்திற்கு விடப்படும். இந்தப் பகுதிகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை எடுக்க எண்ணெய் துரப்பன நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெற முடியும். இந்த எண்ணெய் வயல்களில் குறைவான அளவு பெட்ரோலியப் பொருட்கள் இருந்ததால் இவற்றிற்கு குறைந்த அளவு முன்னுரிமையே கொடுக்கப்பட்டது. இப்போது கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் இந்த எண்ணெய் வயல்களில் இருந்து உற்பத்தியை மேற்கொள்ள முடியும். ‘குறைந்தபட்ச அரசு குறைந்தபட்ச நிர்வாகம்’ என்ற கொள்கையின்படி ஒப்பந்தங்களிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஒப்பந்தங்கள் லாப பங்கீட்டிலான குறித்த அடிப்படையில் இருந்தன. இதன்படி, தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு கொண்டால் செலவு குறித்து ஆராயப்பட வேண்டியிருக்கும். இதனால், பல பிரச்சனைகளும், கால தாமதமும் ஏற்பட்டன. தற்போதுள்ள புதிய ஆட்சியில் செலவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மொத்த வருமானத்தில் ஒரு பங்கை அரசு பெறும். முன்னதாக உரிமம் பெற்ற நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களில் ஒரே ஒரு பொருளை மட்டும் தான் பெற முடியும். (உதாரணம். எண்ணெய்.) மற்றவற்றிற்கு தனியாக உரிமங்கள் பெற வேண்டும். ஆனால், தற்போது கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின்படி உரிமம் பெற்ற நிறுவனம் பெட்ரோலியப் பொருட்கள் அனைத்தையும் பெறலாம். புதிய கொள்கையின்படி குறைந்த அளவே கிடைக்கும் எண்ணெய் வயல்களில் இருந்து கிடைக்கும் பெட்ரோலிய பொருட்களை சந்தை விலையில் விற்க முடியும்.

இந்த முடிவின்படி இந்தப் பிரிவில் மூலதனங்கள் அதிகமாகும் என்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியும் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

••••••