பி.எம்.இந்தியா
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் திரு விஜய் சம்ப்லா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து, ரூ ஒரு கோடிக்கான வரைவோலையை வழங்கினார். இந்த தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியில் சேர்க்கப்படும். தைனிக் சவேரா டைம்ஸ் நாளிதழின் வாசகர்கள் இந்த தொகையை வழங்கினர்.