பி.எம்.இந்தியா
பிரான்ஸில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெர்மனி அதிபர் திரு. ஃபிரெட்ரிக் மெர்ஸைச் சந்தித்துப் பேசினார்.
இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே, இந்த ஆண்டில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி அதிபர் இந்தியாவில் மேற்கொண்ட பயணம், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் நிறைவு போன்றவை மூலம், இவ்விரு நாடுகளிடையேயான உத்திசார் ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள புதிய உத்வேகம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். 2026-ல் இந்தியா – ஜெர்மனி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, நீடித்த வளர்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்கம், கல்வி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதியான நிலைப்பாட்டை இரு தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்துறை ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானதையும், ஜெர்மனி வழியாகச் செல்லும் இந்திய மக்களுக்கான ‘பயண விசா’ பெறுவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளதையும் அவர்கள் வரவேற்றனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், ரஷ்யா-யுக்ரைன் மோதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச, மண்டல அளவிலான விவகாரங்கள் குறித்தும், இது தலைவர்களும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான முன்னேற்றத்திற்கும் அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில், ஜெர்மனியில் நடைபெறவுள்ள 8-வது இந்தியா-ஜெர்மனி நாடுகளிடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அந்நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, ஜெர்மனி அதிபர் மெர்ஸ் அழைப்பு விடுத்தார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274106®=3&lang=1
(Release ID:2274106)
****
TV/SV/SH
PM @narendramodi held fruitful talks with @bundeskanzler Friedrich Merz in Evian and discussed ways to further strengthen the India-Germany bilateral cooperation. The discussions covered areas such as defence, circular economy, trade, IT and investments, along with efforts to… pic.twitter.com/0VrByjTaAb
— PMO India (@PMOIndia) June 17, 2026
The talks with Chancellor Merz were very fruitful. We discussed ways to further cement bilateral cooperation by working together in trade, investments, circular economy, defence, IT and more. We also talked about boosting cultural linkages between our nations.@bundeskanzler… pic.twitter.com/05wKDJvdzp
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
Die Gespräche mit Bundeskanzler Merz waren sehr fruchtbar. Wir haben Möglichkeiten erörtert, wie wir die bilaterale Zusammenarbeit durch gemeinsame Anstrengungen in den Bereichen Handel, Investitionen, Kreislaufwirtschaft, Verteidigung, IT und weiteren Bereichen weiter festigen… pic.twitter.com/J97rAHHSTc
— Narendra Modi (@narendramodi) June 17, 2026