Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டம் – நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினர்.

அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டம் – நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினர்.


அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அலகாபாத் உயர் நீதி மன்றம் நமது நீதித்துறையின் பயணத்தில் புனிதப் பயணமாகும் என்ற சட்டத் துறையில் தொடர்பு கொண்டிருந்தவர்கள் நமது சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் நம்மை காலணி ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்றினர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2022ல், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாம் எப்படிப்பட்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு குடிமகனும் இதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2014 மே முதல், மத்திய அரசு 1200 பயனற்ற சட்டங்களை அகற்றி உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த நூற்றாண்டில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டத் துறையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் முனைவோர் துறையில் ஈடுபட்டு உள்ளவர்கள், சட்டத் துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை கண்டு அறிய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

***