Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான மரபு வழிதடத்தில், குஷியாரா ஆற்றில் அஷீகன்ஜ்-ஜகிகன்ஜ் தடத்திலும் மற்றும் ஜமுனா ஆற்றில் சிராஜ்கன்ஜ்-தாய்காவா தடத்திலும் பொதுவழியை உருவாக்கிட இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான மரபு வழிதடத்தில், இருநாடுகளும் கூட்டாக தேவையான தூர்வாரல் பணியை மேற்கொண்டு, குஷியாரா ஆற்றில் அஷூகன்ஜ்-ஜகிகன்ஜ் தடத்திலும் மற்றும் ஜமுனா ஆற்றில் சிராஜ்கஞ்-தாய்காவா தடத்திலும் பொதுவழியை உருவாக்கிட இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வடகிழக்கு இந்தியாவிற்கு செல்லும் சரக்கு போக்குவரத்து செலவினத்தை கணிசமாக குறைக்கும். மேலும் இது, சிலிகுரி குறுகலான வழித்தடத்தில் ஏற்படும் நெரிசலையும் குறைக்கும்.