Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் பிரதமருடன் சந்திப்பு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் பிரதமருடன் சந்திப்பு


அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப்பின் வாழ்த்துகளை லெப்டினென்ட் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் பிரதமரிடம் தெரிவித்தார். அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப்புடன் தான் மேற்கொண்ட உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் முக்கியதுவத்தையும், இந்தியா அமெரிக்காவின் உறவை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முயற்சி குறித்து பேசினார்.

ஆப்கானிஸ்தான், மேற்கு ஆசியா மற்றும் கொரியா பகுதியில் உள்ள பாதுகாப்பு சூழல் குறித்த தனது கருத்துகளை லெப்டினென்ட் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார். தீவிரவாதத்தை எதிர் கொள்ளளவும், மண்டல அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளும் எப்படி ஒன்றாக செயல்பட முடியும் என்பது குறித்தும் அவர்கள் தங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொண்டனர்.

***