Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்புடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கானுடன் விவாதித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்மாயிலி சமூகத்தினரின் 50-வது இமாமான ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கானை புதுதில்லியில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது அவரது தந்தையான மறைந்த நான்காவது ஆகா கான் குறித்தும் வளர்ச்சிப் பணிகளில் அவரது பங்களிப்பு குறித்தும் திரு மோடி நினைவுகூர்ந்தார்.

சுகாதார நலன், வேளாண்மை, ஊரக மேம்பாடு, இளையோருக்கு அதிகாரம் அளித்தல், மகளிருக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட துறைகளில் ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்புடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் விவாதித்தார்.

இதுகுறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கானை சந்தித்ததில் மகிழ்ச்சி. இச்சந்தின்போது அவரது தந்தையும் மறைந்த நான்காவது ஆகா கான் குறித்தும் வளர்ச்சிப் பணிகளில் அவரது பங்களிப்பு குறித்தும் நினைவுகூர்ந்தேன்.

சுகாதார நலன், வேளாண்மை, ஊரக மேம்பாடு, இளையோர் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்புடன் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

***

(Release ID: 2308663)

TV/IR/PS/SU