Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நல்வாழ்வு, ஞானம், செழுமை ஆகியவற்றுக்கான அருள் வேண்டி சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


அனைவருக்குமான நல்வாழ்வு, புனிதம், பாதுகாப்பு, அமைதி, ஞானம், செழுமை ஆகியவற்றுக்கான ஆசிர்வாதங்களை வேண்டி பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். இந்த நீதிமொழி இந்திரன், சூரியன், கருடன், பிரஹஸ்பதி ஆகியோரின் அருளை வேண்டுகிறது.

இது தொடர்பாக சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

சிறப்புமிக்க இந்திரதேவன் நமது நலனுக்காக அருளட்டும். அகிலத்தை அறிந்தவரும் அனைவரையும் காப்பவருமான சூரியன் நமக்கு புனிதத்தை அருளட்டும். தடைகளைக் களையும் கருடன் நம் அனைவரையும் காக்கட்டும். ஞானத்தின் அதிபதியான பிரஹஸ்பதி நமக்கு அமைதி, ஞானம், செழுமை ஆகியவற்றை அருளட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308575&reg=3&lang=1

***

TV/IR/PS/SU