Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை


மேதகு உறுப்பினர்களே,

நமது இரு நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டுறவு மற்றும் உலகத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த பரிந்துரைகள் ஆகியவை குறித்து உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். உங்களது எண்ணங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவை ஆகும்.

சர்வதேச மன்றங்களில் உங்கள் கவலைகள் குறித்து நாங்கள் கூருணர்வுடன் செயல்படுவோம் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன். உங்களது முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிற்கு ஏற்றபடி நமது இரு தரப்பு ஒத்துழைப்பை மாற்றி அமைப்போம் என்று இங்கே தெரிவிக்கிறேன்.

தற்போது உலகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த எனது எண்ணங்களையும் நமது கூட்டுறவின் மூலம் இவற்றை சமாளிக்க தேவையான முயற்சிகளைப் பற்றி, நான் உங்களிடையே கூற விரும்புகிறேன்.

தட்பவெட்ப நிலை மாற்றம் என்பது எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். இதை சமாளிப்பது இந்தியாவின் முன்னுரிமையாக இருக்கிறது. எங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் இதை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மேலும் நமது உலகில் எதிர்காலத்தின் முன்னேற்றம் தற்போதைய காலகட்டத்தின் அவசியம் குறித்தும் நாங்கள் இதை மேற்கொண்டுள்ளோம்.

ஆகவேதான் 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். சர்வதேச ஒத்துழைப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக இதை நாங்கள் செயல்படுத்த முடியும். இலக்குகள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றைப் பற்றி நாங்கள் பேசும்போது அதற்கு தேவையான தொழில்நுட்பம், நிதி ஆகியவை இருந்தால் தான் தூய்மையான எரிசக்தியை எளிதில் நாங்கள் பெற முடியும். இல்லையெனில், இலக்குகள் வெறும் கனவுகளாகவே இருக்கும். அதேபோல், தட்பவெட்ப நிலை மாற்றம் நமது வாழ்க்கை, மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் பாதிப்பைத் தவிர்க்க உலக அளவில் எங்களுக்கு ஆதரவு தேவையாக இருக்கிறது.

பாரீஸ் நகரில் நடக்க இருக்கும் COP21 ஒருங்கிணைந்த முறையில் நாங்கள் ஒத்துழைப்போம். உங்களது ஆர்வம் எங்களது வலிமையாக இருக்கும்.

மேதகு உறுப்பினர்களே,

நான் முதன்முதலில் கூறியபடி ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உலக நாடுகளின் விருப்பங்களாகும்.

நான் முன்பு கூறியபடி பொதுச்சபையின் தலைவர் கொடுத்த அளித்த வரைவு ஆவணத்தை நாம் ஒப்புக் கொண்டு, அதையே பொதுச்சபையின் 70வது கூட்டத்தொடரில் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவு காண வேண்டும்.

கடல் பிராந்தியத்தில் உங்கள் நாடு மிகப்பெரியது. கடல் பிராந்தியத்தில் உள்ள வளத்தை நிலைநிறுத்த உங்கள் ஒத்துழைப்புடன் செயலாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

கடல் பகுதி மற்றும் கடல் ஆராய்ச்சிக்காக இப்பகுதியில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் தீவுகளில், கடல் உயிரியல் ஆய்வு நிலையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களின் உதவியுடன் ஆராய்ச்சிகளை நாம் உடனடியாக தொடங்க வேண்டும்.

2016ஆம் ஆண்டு புதுதில்லியில் கடல் பொருளாதாரம் குறித்தும், பசிபிக் தீவுகள் நாடுகள் குறித்தும் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். 14 பசிபிக் தீவுகள் நாடுகளின் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்வர்.

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகளில் இந்திய கடற்படை தேவையான கண்காணிப்பு மற்றும் நிலவுலக நீர்நிலைப் பரப்வாய்வுகளை நடத்தி அந்த நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த நாடுகளின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது. அவர்களது கடல் பிராந்தியம் குறித்து, அறிந்து கொள்ள உதவியாக உள்ளது. பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு இதுபோன்ற உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்திய கடற்படை பசிபிக் தீவுகளுக்கு நல்லெண்ணப் பயணமாக செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த நாடுகளில் உடல் நலத்திற்கு தேவையான வசதிகளையும் அந்தத் துவுகளில் மருத்துவ முகாம்களை நடத்தி இதன் மூலம் நாங்கள் அளிக்க முடியும்.

விண்வெளி மற்றும் கடல் பிராந்தியம் மட்டுமில்லாமல் நமது நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிக வலுவாக உள்ளன.

விண்வெளி மற்றும் தொழில் நுட்பத்தின் மூலம் நில நீர் வளங்கள், மீன்வளம், வன ஆதாரங்களை நிர்வகிப்பது, கடலோர மற்றும் கடல் பிராந்தியம் பற்றிய ஆய்வு, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை வழங்க முடியும்.

பசிபிக் தீவுகள் நாடுகள் ஒன்றில் விண்வெளி தொழில்நுட்பம் மையம் ஒன்றை அமைக்க நாங்கள் உதவி செய்வோம். விண்வெளி விஞ்ஞானம் குறித்தும் நாங்கள் பயிற்சி அளிக்கவும் இயலும்.

செவ்வாய் கிரகத்திற்கு ஏவுகணை அனுப்புவதில் பிஜி நாட்டின் ஆதரவு குறிப்பிடத் தகுந்ததாகும். பசிபிக் தீவுகள் நாடுகள் தொடர்ந்து எதிர்காலத்திலும் இதுபோன்ற ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இயற்கை அழிவுகளை நாம் தடுக்க இயலாது. ஆயினும் அதன் தாக்குதலை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

பசிபிக் தீவுகள் நாடுகளின் இயற்கை அழிவுகளால் ஏற்படும் தாக்குதலை தவிர்ப்பதற்கு தேவையான திறனை உருவாக்க எண்ணுகிறோம். விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் இவற்றை கண்டறியவும். மனித வள மேம்பாட்டை அதிகரிக்கவும் இயலும்.

மனித வள மேம்பாடு என்பது கூட்டுறவின் ஒரு முக்கிய பகுதியாகும். நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்க கூட்டுறவைத் தவிர, வேறு எதுவும் இல்லை.

இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு பயிற்சித் திட்டத்தில் பிஜிக்கு 110 இடங்களும், மற்ற 13 நாடுகளுக்கு இதுவரை இருந்த 119 என்பது இரட்டிப்பாக்கப்பட்டு, 238 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத் தவிர, இந்தியாவில் கல்லூரி படிப்பிற்காக 13 நாடுகள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு உதவித் தொகைகள் பிஜி நாட்டிற்கு தொடர்ந்து 33 உதவித் தொகைகளும் வழங்கப்படும். பசிபிக் தீவுகள் நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு பெங்களூருவில் உள்ள இந்திய நிர்வாகக்கழகத்தில் இரண்டு வார வர்த்தக நிர்வாகம் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த 3 ஆண்டுகளில் எட்டு பசிபிக் தீவுகள் நாடுகளிலிருந்து 43 பெண்களுக்கு சூரிய எரிசக்தி திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, இந்த எண்ணிக்கை 70ஆக உயர்த்தப்படுகிறது. இதைத் தவிர 2800 வீடுகளுக்கு அதாவது, ஒவ்வொரு பசிபிக் தீவுகள் நாடுகளுக்கும் 200 வீடுகளுக்கு சூரியஒளி மின்சக்தி அளிக்கப்படும். இதன் மூலம் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மண்ணெண்ணை மீதமாகும்.

ஒவ்வொரு பசிபிக் தீவுகள் நாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, கணிணி மூலமாக மருந்துகளை அளிப்பது, மற்றும் கல்வி அளிப்பது ஆகியவையும் மேற்கொள்ள முடியும்.

வர்த்தகத்தின் வேகம் மேலும் வலுப்படுத்த இயலும். உங்கள் நாடுகளின் வர்த்தக அலுவலகம் புதுதில்லியில் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிக்கும். அவர்கள் தங்கள் தொழில்களுக்குத் தேவையான சாதனங்களை வாங்குவதற்கு உதவிச் செய்ய தயாராக உள்ளோம்.

சந்தைப்படுத்துதல் குறித்தும், சிறு தீவுகள் மேம்பாட்டு நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம். உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சேவைகளையும் மேம்படுத்த நாங்கள் முனைவோம்.

சிலவகை மருந்துகளை மூன்றாவது நாடுகள் வழியாக உங்களுக்கு அனுப்புவதால் அதன் விலை கூடுகிறது. பசிபிக் தீவுகள் பகுதியில் நாங்கள் மருந்து தயாரிப்பு நிலையங்களையும், அவற்றை அளிப்பதற்கான மையத்தையும் திறக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

நாடுகளுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்த மனிதர்களிடையே தொடர்புகள் அவசியமாகிறது.

பசிபிக் தீவுகள் நாடுகளின் மக்களுக்கு மின்னணு முறையில் விசா அளிக்கப்படும் என்று சென்ற ஆண்டு நாங்கள் அறிவித்தோம். அதுபோன்று கட்டணம் இல்லாத விசாவை அளிக்க நாங்கள் முடிவு செய்துள்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

கலாச்சாரம், பொழுதுபோக்கு, செய்திகள், கல்வி போன்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை பிரசார் பாரதி அமைப்பின் மூலம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உங்களது நாடுகளுக்கு அன்பளிப்பாக அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பசிபிக் தீவுகள் நாடுகளிலிருந்து நிகழ்ச்சிகளை ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்ய தேவையான பயிற்சிகள் பிரசார் பாரதி அமைப்பின் மூலம் அடுத்த சில மாதங்களில் அளிக்கப்படும்.

மின்னணு நூலகங்களை உங்கள் நாடுகளில் அமைக்கவும் அவற்றின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு புத்தகங்களைக் கொடுக்கவும் இந்திய மையங்கள் உருவாக்கப்படும்.

மேதகு உறுப்பினர்களே,

குறுகிய காலகட்டத்தில் நாம் வெகுவாக முன்னேறியுள்ளோம். நல்ல எண்ணங்கள் ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல் போன்றவற்றின் மூலம் நமது நாடுகளின் உறவுகள் மேம்பட்டுள்ளன. ஒரே மாதிரியான எண்ணங்களும், சவால்களை சந்திக்கும் திறமைகளிலும் ஒருவருக்கொருவர் இணைந்து போவதால் பூகோள அமைப்பு இதற்கு தடை இராது. 21வது நூற்றாண்டில், நாடுகளிடையே உள்ள இதுபோன்ற உறவுகள் நம் அனைவருக்கும் உதாரணமாக விளங்கும்.

இந்தியாவிற்கு நீங்கள் ஆதரவு அளிப்பது வரவேற்கத்தக்கது. நமது நாடுகள் இணையும் போது நாடுகளிடையே உள்ள தொடர்பு மேம்படுவதற்கு காரணம் நம்மிடையேயுள்ள ஒரே மாதிரியான விருப்பங்களும், நாம் அனைவரும் சமம் என்கின்ற எண்ணமாகும்.

வசுதைவக் குடும்பகம் என்கிற உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் தான் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் நமது எண்ணங்களை புரிந்து கொண்டுள்ளோம். அதனால், இந்த உலகம் சிறந்த இடமாக மாற வழி வகுக்கும்.

உங்களுடன் நான் இங்கே இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவில் உங்களது பயணம் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், இந்தியாவிற்கு நீங்கள் அடிக்கடி வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

*****