பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவிக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடவும், பின்னேற்பிற்கும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
இந்த உடன்படிக்கை, சுங்கக் குற்றங்களை தடுத்தல் மற்றும் விசாரணை தொடர்பான தகவல்கள் கிடைக்கச் செய்வதற்கு உதவும். இந்த உடன்படிக்கை, முறையான வணிகத்திற்கு வழி செய்வதுடன், நாடுகளுக்கு இடையே வணிகம் செய்யப்படும் பொருட்களை சிறந்த முறையில் அனுமதிப்பதற்கும் உதவும்.
பின்னனி:
இந்த உடன்படிக்கை, இரு நாடுகளிலும் உள்ள சுங்க அதிகாரிகளுக்கு இடையே தகவல்கள் மற்றும் நுண்ணறிவை பரிமாறிகொள்வதற்கான சட்ட கட்டமைப்புகளை அளிப்பதுடன், சிறந்த முறையில் சுங்கச் சட்டங்களை திறமையாக செயல்படுத்துவதற்கும், சுங்கக் குற்றங்களை தடுத்தல் மற்றும் விசாரணகளுக்கு உதவுவதுடன், சட்டரீதியான வணிகத்திற்கும் வழி செய்யும். இந்த உடன்படிக்கை, இந்திய சுங்கத் துறையின் கவலைகளையும் தேவைகளையும், குறிப்பாக, தெரிவிக்கப்பட்ட சுங்க மதிப்பீட்டின் உண்மைத் தன்மை, பொருள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் மற்றும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வதை கவனத்தில் கொண்டுள்ளது.
***