Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதி அயோக் பொருளாதார நிபுணர்கள் பிரதமருடன் கலந்துரையாடல்


s2015020661959 [ PM India 143KB ]

முக்கிய பொருளாதார நிபுணர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் நிதி அயோக்கில் இன்று கலந்துரையாடினர். நிதி அயோக்கில் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். இக்கலந்துரையாடலில் பிரதமர் தெரிவித்ததாவது:-

நிதி அயாக்கின் முக்கிய குறிக்கோள் ஒரு சக்தி வாய்ந்த நிர்வாக செயல்முறையை கொண்டுவருவதே ஆகும். இதில் அரசு துறைக்கு வெளியில் உள்ள முக்கிய நபர்களும் கொள்கைகளை உருவாக்குவதில் பங்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஒருங்கினைந்த கூட்டாட்ச்சி முறையே இப்போதைய தேவை. மாநிலங்களுக்குள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

s2015020661962 [ PM India 172KB ]

மக்களின் கனவுகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா விரைவாக வளர வேண்டும். சர்வதேச சூழலை இந்த வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

அரசின் சமீப காலத் திட்டங்களான பிரதமர் மக்கள் நிதி திட்டம், சமையல் எரிவாயு மானியத்திற்கான நேரடி பண பரிமாற்றம், தூய்மையான இந்தியா போன்ற திட்டங்கள் குறித்து தெரிவித்த பிரதமர் நிபுணர்கள் குழு ஆலோசனை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லியும் நிதி அயோக்கின் துணை தலைவர் திரு. அரவிந்த் பணாகரியாவும் அறிமுக உரை ஆற்றினார்.

பொருளாதார நிபுணர்களான திரு. விஜய் கேல்கர், திரு. நிதின் தேசாய், திரு. பிமல் ஜலான், திரு. ராஜீவ் லால், திரு. ஆர்.வைத்திய நாதன், திரு. சுபிர் கோக்ரன், திரு. பார்த்தசாரதி ஷொம், திரு. பி. பாலாகிருஷ்ணன், திரு. ராஜீவ் குமார், திரு. அசோக் குலாட்டி, திரு. முகேஷ் புட்டானி, திரு. ஜி.என். பாஜ்பாய் ஆகியோர் இந்த கலந்துறையாடலில் கலந்து கொண்டனர். அதிக வளர்ச்சி, கணிக்கக்கூடிய வரி விதிமுறை, முன்னெச்சரிக்கையுடன் நிதி கையாள்வது, விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி அரசு செயல்பட வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பொருளாதார துறைக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிதி அயோக்கின் உறுப்பினர்கள் திரு. விவேக் தேவ்ராய், திரு. வி.கே.சரஸ்வத், தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சரவை குழுவின் செயலர், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர், தலைமை பொருளாதார ஆலோசகர், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அயோக்கின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.