Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிளைட் லேடினன்ட் மூவாத் அல் கஸாஸ்பே கொலை-பிரதமர் கண்டனம்


பிளைட் லேடினன்ட் மூவாத் அல் கஸாஸ்பேவின் கொலை செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளித்துள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜார்டன் அரசர் திரு. அப்துல்லா – II இபன் அல்-உசேனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் தெரிவித்ததாவது:-

தீவிரவாதம் நமக்கு இன்னும் சவாலாக உள்ளது என்பதை இந்த சம்பவம் நினைவு ஊட்டுகிறது. உலக சமூகத்திலிருந்து திடமான பதிலை எதிர்பார்கின்றது. இம்மாதிரியான கொடுமையான, முட்டாள்தனமான மற்றும் கோழைதனமான செயல்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இந்த துயரமான நேரத்தில், வருத்தத்தில் வாடும் குடும்பத்திற்கும், மக்களுக்கும், ஜார்டனின் ஹசிமைட் அரசிற்கும் இந்தியா ஆதரவாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.