பி.எம்.இந்தியா
[
121KB ]
Click here on E-book of NITI Aayog [
0KB ]
நிதி அயோக் குழுவிடம் பிரதமர் நரேந்திர மோடி:-
மத்திய அரசுடன் இணைந்த ஒருங்கினைந்த, கூட்டாட்ச்சி முறையை மாநிலங்கள் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களிடம் தெரிவித்தார். மத்திய அரசையும் மாநில அரசுகளையும் கொண்ட நிதி அயோக் தங்களுக்குள் உள்ள வேற்றுமையை மறந்து, வளர்ச்சிக்கும் செழிப்புக்குமான பாதைக்குத் திட்டமிட வேண்டும் என்று தெரிவித்தார்.
நிதி அயோக்கின் ஆளுமைக் குழுவின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர், இந்த சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்களை கொண்டு வருவதற்கான திறன் உடையது என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:-
தேசத்தின் வளர்ச்சியை முற்போக்குப் பாதையில் நிதி அயோக்கின் ஆளுமை குழு கொண்டு செல்லும். “அனைவரும் இணைவோம் அனைவரும் முன்னேருவோம்” என்ற நோக்கில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக கொண்டு வருவோம். அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் முன்னேறினால் தான் இந்தியா முன்னேறும் ஒருங்கினைந்த போட்டி நிறைந்தகூட்டாட்ச்சி முறை என்ற பார்வையில் அனைத்து மாநிலங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை நான் கொண்டுள்ளேன்.
இந்தியாவை உலகம் வித்தியாசமாகப் பார்க்க துவங்கி உள்ளது. ஆனால், இன்றும் வறுமையை ஒழிப்பதே நமக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. வளர்ச்சி இல்லாமல் வேலைவாய்ப்புகளும் உருவாக்க முடியாது, வறுமையையும் ஒழிக்க முடியாது. அதனால், வளர்ச்சியை அதிகரிப்பதே நமது முதல் மற்றும் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
குறித்த நேரத்தில் முடிவு எடுக்கப்படாமல் இருப்பதால் திட்டங்கள் நின்று விடுகின்றன. ஒரு திட்டம் எந்த நிலையில் வேண்டுமானாலும் எந்த குழுவிடமும் நின்று விடலாம். திட்டத்தின் பலன் மக்களை சென்று அடையாமல் இது தடுக்கின்றது. அதுமட்டுமின்றி இது திட்ட செலவையும் அதிகரிக்கிறது. திட்டங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விஷயங்களுக்கு முதல் அமைச்சர்கள் தனிப்பட்ட அக்கறை செலுத்த வேண்டும். முதலீடு, வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்குவது ஆகியவற்றில் முதல் அமைச்சர்கள் கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். திட்ட அமலாக்கத்தை விரைவாக்கும் வகையில் மாநில அரசுகள் ஒரு அதிகாரியை கண்டறிந்து நிலுவையில் உள்ள பிரச்சனைகளைக் கண்காணிக்கும் செயலில் ஈடுபடுத்தலாம்.
மாநிலங்கள் சிறப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்த மத்திய அரசு நிதி, தொழில்நுட்பம், அறிவுசார் துறை ஆகியவற்றில் அதிகாரம் அளிக்க விரும்புகிறது.
நிதி அயோக் அமைக்க மத்திய அமைச்சரவை கொடுத்த தீர்மானம் மண்டல குழுக்கள் அமைப்பதற்கான வசதியையும் வழங்குகிறது. பிரச்சனைகளை சந்திக்கும் மாநிலங்களுக்கு இடையே இந்த குழுக்கள் ஒத்துழைப்பை கொண்டுவரும் என்று நம்புகிறேன். திட்டங்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரச்சனைகளையும் சுமுகமாக தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்.
நிதி அயோக்கின் செயல்பாடு மூலம் ‘அனைவருக்கும் பொருந்தும் திட்டம்’ என்ற பாதையிலிருந்து விலகி, மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை அமைக்கும் என்று நம்புகிறேன். கூட்டாச்சி முறை நன்கு செயல்பட மாநிலங்கள் தேசிய கொள்கைகளைப் பரப்ப வேண்டும். ஒருங்கினைந்த கூட்டாட்ச்சி முறையின் முக்கிய அங்கம் மாநிலங்களின் அர்ப்பணிப்பாகும். தேசிய குறிக்கோள்களில், அவர்கள் தேர்ந்தெடுப்பதை உறுதியாக வழங்க வேண்டும்.
நிதி அயோக்கின் சிந்தனை பெட்டகம் என்று குறிப்பிட்ட பிரதமர் மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் மத்திய அரசுடனும் இணைந்து செயல்படுவதற்கான வழியை நிதி அயோக் அமைக்கும். சிறந்த செயல்பாடுகள் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளலாம். ஒரு இணையதளம் அமைத்து, மாநிலங்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். கடந்த 25 ஆண்டுகளாக, இந்திய பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தை பொருளாதாரமாக மாறி உள்ளது. திட்டமிடும் முறை மாற்றி அமைப்பது குறித்து அனைவரும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
இப்போதைகக்கு நமது குழு கவனமும் சிறந்த அரசு முறையில்தான் உள்ளது. நாம் செய்யும் அனைத்து நன்கு சிந்தித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். அது நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். நிதி அயோக்கின் துணை தலைவர் திரு. அரவிந்த் பணகரியா இந்த கூட்டத்தில் அறிமுக உரையாற்றினார்.