Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காபூலிலிருந்து இந்தியா வந்த முதல் சரக்கு விமானத்திற்கு பிரதமர் வரவேற்பு, இந்த முன்முயற்சிக்காக ஆப்கன் அதிபர் கனிக்கு நன்றி தெரிவித்தார்.


காபூலிலிருந்து இந்தியாவிற்கு வந்த முதல் சரக்கு விமானத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றார். இந்த முன்முயற்சிக்காக ஆப்கானிஸ்தான் அதிபர் திரு அஷ்ரப் கனிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

“காபூலிலிருந்து வந்த முதல் சரக்கு விமானத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நேரடி இணைப்பு வளமையைத் தரும். அதிபர் அஷ்ரப் கனியின் இந்த முன் முயற்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.