பி.எம்.இந்தியா
கனடா நாட்டின் பிரதமர் திரு. ஜஸ்டின் டுரூடோவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
இரு நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பருவநிலை மாற்றம் குறித்த தங்களின் கருத்துகளை இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர். பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா உறுதியாக இருப்பதை அப்போது பிரதமர் மீண்டும் உறுதிபடுத்தினார்.
கனடியன் கூட்டமைப்பிற்கு 150 ஆண்டு நிறைவடைவதையொட்டி பிரதமர் மோடி பிரதமர் டுரூடோவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பல்வேறு துறைகளில் கனடாவுடனான இந்தியாவின் இருதரப்பு உறவின் நிலையான ஒட்டுமொத்த வளர்ச்சியை பிரதமர் வெகுவாக பாராட்டினார்.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
PM’s telephonic conversation with Prime Minister @JustinTrudeau of Canada. https://t.co/lgGyGwDrIf
— PMO India (@PMOIndia) June 19, 2017
via NMApp