Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

செஷல்ஸ் அதிபர் மிக்கேல் உடன் இணைந்து பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை


மாண்புமிகு அதிபர் மிக்கேல் அவர்களே,
ஊடகங்களின் பிரதிநிதிகளே,
எனது பெருமைமிகு நண்பர் அதிபர் மிக்கேலை நான் வரவேற்பதில் எப்போதுமே பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகர் மிக்கேல் எனக்கு அளித்த சிறப்புமிக்க வரவேற்பை திரும்ப அளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் அவரது நாட்டை தொலைநோக்கு பார்வையுடன் வழிநடத்தி செல்கிறார். தட்பவெட்பநிலை மாற்றம் குறித்து அவர் தெரிவித்த கவலைகள் உலக அளவில் குறிப்பாக சிறு தீவுகள் கொண்ட நாடுகளிடையே மிக வலுவானவை.

மேதகு அதிபர் அவர்களே, உங்கள் நாட்டின் அழகை நாங்கள் பாராட்டும் அதே நேரத்தில் உங்கள் நாட்டின் வளர்ச்சியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

நான் செஷல்சில் கூறியதை மீண்டும் இங்கு கூற விரும்புகிறேன். உங்கள் நாடு அடைந்துள்ள மாபெரும் சாதனைகள் உங்கள் நாட்டின் அளவைப் போல் அல்ல.

நமது இரு நாடுகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் முன்னேற அதிபர் மிக்கேல் காரணமாக உள்ளார். ஏனெனில், செஷல்ஸ் இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க உறவு கொண்டுள்ளதால் நாங்கள் இதை மதிக்கிறோம்.

நம்மிடையே கருத்து ஒற்றுமைகள் பரந்த அளவில் இருப்பது போல் ஒருவரோடு ஒருவர் நாம் கொண்டுள்ள நம்பிக்கையை சமமான அளவில் உறவுகள் போன்றவை ஆழமான அளவில் உள்ளன.

சென்ற மார்ச் மாதம் செஷல்ஸ் நாட்டிற்கு நான் பயணம் மேற்கொண்டபோது, நாம் இருவரும் எடுத்த முடிவுகளை செயலாக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதிபர் மிக்கேலின் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் கூடுதல் வேகத்தை அளித்துள்ளது.

குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில், கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நம்மிடையே பாதுகாப்பு பற்றிய கூட்டுறவு நன்கு செயல்பட்டு வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிப்பதற்காக விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் கடலோர பகுதிகளுக்கான ரேடார் அமைப்புகள் ஆகியவற்றை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடல் பகுதிகளில் நம் இரு நாடுகளாலும் நடத்தப்படும் நிலவுலக நீர்நிலைப் பரப்பாய்வு போன்ற ஆய்வுகள் மிகவும் விரிவாகவும், வளர்ச்சியுறும் வகையிலும் உள்ளன.

செஷல்ஸ் நாட்டிற்கு கடலோர காவல்படையின் மேலும் ஒரு இடைமறிப்பு படகை அன்பளிப்பாக இந்தியா அளிக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற மார்ச் மாதம் இரண்டாவது டோர்னியர் ரக விமானம் ஒன்று அன்பளிப்பாக செஷல்ஸ் நாட்டிற்கு அளிக்கப்படும் என்று அறிவித்தேன். இதற்கான நடைமுறைகள் விரைவாக முடிக்கப்பட்டு, இன்று ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

செஷல்ஸ் அதிபரும் நானும், நீல பொருளாதாரம் எனப்படும் கடல் பொருளாதாரம் குறித்து, முக்கியத்துவத்தை அளித்துள்ளோம். சிறிய தீவுகள் கொண்ட நாடுகள் பெரிய அளவில் கடல் ஆதாரங்கள் நிறைந்தவையாக இருப்பதால் அந்நாடுகளை கடலில் உள்ள பெரிய நாடுகளாக நாம் எண்ண வேண்டும் என்பதை நானும், அதிபரும் நம்புகிறோம்.

நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் ஏற்பட்ட முடிவுகள் குறித்த தீர்மானம் கடல் பிராந்தியத்தில் கிடைக்கும் நிலையான ஆதாரங்களுக்கு காரணியாக உள்ளது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நம் இரு நாடுகளுக்கும் இடையே நீல பொருளாதாரம் பற்றிய இருதரப்பு ஒப்பந்தம் நமது உறவுகளை மேலும் மேம்படுத்துவதோடு, இப்பிராந்தியத்தில் பொருளாதாரம் நிலையானதாக இருக்க உதவுகிறது.

விண்வெளி ஆய்விலும் கடல்சார் பொருட்கள், மீன் வளம், வானிலை ஆகியவை குறித்தும் கூட்டுறவாக செயல்பட நாங்கள் விரும்புகிறோம்.

செஷல்ஸ் நாட்டில் உள்ள அசம்ஷன் தீவில் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிகளை நாங்கள் துவக்கியுள்ளோம்.

சென்ற மார்ச் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் பேசியுள்ளேன். விமான சேவை பற்றிய இன்றைய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை மேலும் எளிதாக்கும்.

தட்பவெட்பநிலை மாற்றம் உலக அளவில் மிகப் பெரும் சவாலாக உள்ளது. செஷல்ஸ் போன்ற தீவுகளுக்கிடையே உள்ள நாடுகளில் இது அச்சுறுத்தலாக உள்ளது. 7500 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடல் பிராந்தியமும் கிட்டத்தட்ட 1300 தீவுகளும் கொண்ட இந்தியாவும் இது குறித்து கவலை அடைந்துள்ளது.

நிலையான எதிர்காலத்திற்காக தேசிய அளவில் நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம். தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாரீஸ் நகரில் சி.ஓ.பி. 21 மாநாட்டில் நாங்கள் ஒருங்கிணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

இந்த 70 வது ஆண்டு நிறைவு ஆண்டில் பாதுகாப்பு சபை உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எனது ஆவலை நான் தெரிவித்துள்ளேன்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்கு செஷல்ஸ் ஆதரவு அளிப்பது குறித்து நாங்கள் பாராட்டு தெரிவிக்கிறோம்.

சர்வதேச அமைப்புகளில் பங்கு கொள்ளும் வகையில் சிறிய தீவுகள் கொண்ட வளர்ச்சி பெற்ற மாநிலங்களுடன் இணைந்து செயல்பட என்னுடைய ஆவலை நான் தெரிவித்துள்ளேன்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டிற்கு அதிபர் மிக்கேல் ஆதரவு அளிப்பதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

சர்வதேச யோகா தினத்தை வெற்றிகரமாக செயல்படுத்த செஷல்ஸ் நாடு அளித்த ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

மேதகு அதிபர் அவர்களே, நாங்கள் நமது இரு நாடுகளும் வேறுபட்ட அளவுகளை கொண்டுள்ளன. ஆயினும், சர்வதேச அளவில் நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு குறிப்பிடத்தகுந்த வகையில் உள்ளது.

இந்த உறவுகள் மேலும் புதிய அளவை எட்டும் என்று நான் நம்புகிறேன்.
மிகவும் நன்றி.

•••••••