பி.எம்.இந்தியா
பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறையினரோடு பிரதமர் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்
நியூஸ் கார்ப் மற்றும் 21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் முர்டாக், 21ஸ்ட் செஞ்சுரியின் தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் முர்டாக், நியூஸ் கார்ப் தலைமை செயல் அலுவலர் ராபர்ட் தாம்சன், ஸ்டார் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் உதய் சங்கர், டிஸ்கவரி கம்யூனிக்கேஷன் தலைமை செயல் அலுவலர் டேவிட் ஸாசலாவ், சோனி என்டெர்டெயின்மென்ட் தலைமை செயல் அலுவலர் மைக்கேல் லின்ட்டன், இன்டர் பக்ளிக் க்ரூப் ஆப் கம்பெனிஸ் தலைமை செயல் அலுவலர் மைக்கேல் ராத், வைஸ் மீடியா தலைமை செயல் அலுவலர் ஷேன் ஸ்மித், டபிள்யு பி பி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மார்டின் சோரெல், டைம் வார்ன்ர் தலைமை செயல் அலுவலர் ஜெஃப் ப்யூக்ஸ், ஏ அன்ட் இ நெட்வொர்க்ஸ் தலைமை செயல் அலுவலர் நான்சி ட்யூபுக், விஸி இன்டஸ்ட்ரீஸ் தலைமை செயல் அலுவலர் அந்தோணி ப்ராட், ரூட் ஒன் இன்வென்ஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் வில்லியம் டுஹாமெல், மற்றும் வேல்யூ ஆக்ட் கேப்பிட்டலின் தலைமை செயல் அலுவலர் ஜெப் உப்பென் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒரு அற்புதமான தலைவராக பிரதமர் விளங்குகிறார் என்று பாராட்டிய அந்த தலைமை செயல் அலுவலர்கள், இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்தை குறிப்பிட்டு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கு, தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல வளர்ச்சியை அடைவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறினர்.
செல்பேசிகளுக்கான உள்கட்டமைப்பு வசதியை அதிகரித்து, தொலைக்காட்சிகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டிய அவசியத்தையும் அந்த தலைமச் செயல் அலுவலர்கள் உணர்த்தினர். சமீபகாலமாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், ஊடகத் துறையிலும் நிகழும் மாற்றங்கள் நமது அறிவை ஜனநாயகப்படுத்தி விரிவாக்கியிருக்கின்றன என்று, பிரதமரும் தலைமை செயல் அலுவலர்களும் குறிப்பிட்டனர்.
தொழில் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான உள்கட்டமைப்பும் அவசியம். ஏனெனில், இது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விஞ்ஞான காலம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒரு மிகப்பெரிய வாய்ப்பையும், மிகப்பெரிய சவாலையும் இந்தியா வழங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் இந்தியாவின் பிராந்திய மொழிகளை கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டார். ஆறு லட்சம் கிராமங்களை ப்ராட்பேன்ட் வசதி மூலம் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்ட மோடி, 21ம் நூற்றாண்டின் மனிதனை மனதில் வைத்து, அவர் என்ன மாதிரியான சவால்களை சந்திப்பான் என்றும் என்ன மாதிரியான மதிப்பீடுகளை அவன் பிரதிபலிப்பான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும என்று குறிப்பிட்டார். மனிதவள மேம்பாட்டில், டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறினார்.
PM @narendramodi at the round table on media, technology and communication. pic.twitter.com/dvSf0CIgxQ
— PMO India (@PMOIndia) September 24, 2015
Met top American CEOs from media & entertainment sector. They were enthusiastic about the change @_DigitalIndia initiative in driving.
— Narendra Modi (@narendramodi) September 25, 2015