Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017-க்கு அமைச்சரவை ஒப்புதல்


ஏற்கனவே பிரகடனம் செய்யப்பட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜம்மு – காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்ட) அவசர சட்டம் 2017-க்கும் இந்த சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017-க்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அவசர சட்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) சட்டம் 2017 ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டம் 09.07.2017 அன்று பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017 தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும்.

********